Take a fresh look at your lifestyle.

வெளியானது ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ பட டீசர்!

இரட்டை இயக்குநர்களான விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’. இந்தப் படத்தில் வைபவ், அதுல்யா ரவி, மணிகண்டா ராஜேஷ், ஆனந்தராஜ், இளவரசு, சுனில் ரெட்டி உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்துள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ளார். இதன் டீஸர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இப்படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் விக்ரம் ராஜேஷ்வர், “இது முழு காமெடி படம். படத்தின் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை சிரிக்கலாம். குடும்பத்துடன் ரசிப்பதுபோல இருக்கும். வங்கி ஒன்றில் கொள்ளையடிக்கச் செல்லும் ஒரு கோஷ்டி செய்யும் ரகளைதான் கதை.

கோகுலம் ஸ்டூடியோவில், பல லட்சம் ரூபாய் செலவில் பிரம்மாண்ட சுரங்கம் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தினோம். அந்தக் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன.

பெரிய ஆக்ஷன் படம் போன்ற எண்ணத்தை தலைப்பு கொடுத்தாலும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறோம். இசையமைப்பாளர் டி.இமான், வித்தியாசமான இசையைக் கொடுத்திருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

#இயக்குநர்_விக்ரம்_ராஜேஷ்வர் #Director_Vikram_Rajeshwar #இயக்குநர்_அருண்_கேசவ் #Director_Arun_Kesav #சென்னை_சிட்டி_கேங்ஸ்டர்ஸ் #Chennai_City_Gangsters #வைபவ் #Vaibhav #அதுல்யா_ரவி #Adhulya_ravi #மணிகண்டா_ராஜேஷ் #Manikanda_rajesh #ஆனந்தராஜ் #Anandaraj #இளவரசு #Ilavarasu #சுனில்_ரெட்டி #Sunil_reddy