Take a fresh look at your lifestyle.

பாரதிராஜா மீது ராதாவின் கோபம்…!

‘முதல் மரியாதை’ படத்தின் வெள்ளிவிழா சேலத்தில் நடைபெற்றது.

சிவாஜி கணேசன், பாரதிராஜா, ராதா என படக்குழுவினர் பங்கேற்றனர்.

வெள்ளி விழாவில் பேசிய ராதா, “இந்தப் படத்தில் எனக்கு எங்கள் குருநாதர் பாரதிராஜா சார் நல்ல வேடம் கொடுத்திருந்தார். நன்றி.

ஆனால், அவர் மீது எனக்கு ஒரு கோபம் உண்டு – சிவாஜி சாருடன் எனக்கு ஒரு ‘டூயட்‘ பாடல் வைத்திருக்கலாம்” என வெட்கத்தோடு சொல்லி அமர்ந்தார்.

அடுத்துப் பேசிய சிவாஜி, “என்னுடன் டூயட் பாட முடியவில்லையே என ராதா வருத்தப்பட்டார்.. அதுக்கென்ன அடுத்த படத்தில் ரெண்டு பேரும் ‘டூயட்’ பாடிட்டா போச்சு“ என்றதும், அரங்கம் அதிர்ந்தது.

– பாப்பாங்குளம் பாரதி