Take a fresh look at your lifestyle.

விடியும் வரை காத்திரு: ராஜா இசையை மறக்கமுடியுமா?

அபிராம் அருணாச்சலம்

விடியும் வரை காத்திரு பாக்யராஜ் நடிப்பில் இயக்கத்தில் வந்த மிக சிறந்த க்ரைம் த்ரில்லர் படம்.

இந்த க்ரைம் த்ரில்லர் படங்களுக்கு இளையராஜாவை இசையமைக்க சொன்னால் கேட்கவா வேண்டும், விட்டு விளாசியிருப்பார் மனுஷன்.

இப்படத்தின் பாடல்களைவிட பின்னணி இசை மிக அட்டகாசமாக இருக்கும். இந்த க்ரைம் த்ரில்லர் படம் என்றாலே ஏதாவது பனி சார்ந்த குளிர்சார்ந்த பகுதிகளில் எடுக்கப்பட வேண்டும் என்பது எழுதப்படாத விதி போல, இந்த படமும் ஊட்டி, குன்னூர் பகுதிகளிலே படமாக்கப்பட்டிருக்கும்.

இப்படத்தில் ஆன்ட்டி ஹீரோவாக நெகட்டிவ் பாத்திரத்தில் வரும் பாக்யராஜ் தன் மனைவியை முடித்துவிடுவதற்காக சுவர் ஏறி குதித்து மனைவியை ஜன்னல் வழியாக துப்பாக்கியால் குறிபார்க்கும் ஒரு காட்சி வரும். சுமார் 5 நிமிடத்திற்கு தொடர்ந்து ஒரு பின்னணி இசையை இக்காட்சியில் இளையராஜா வாசித்திருப்பார்.

5 நிமிடத்துக்கு எந்த வசனமும் இருக்காது. மனைவியை குறிபார்ப்பது மட்டுமே காட்சியாக இருக்கும். அந்த 5 நிமிடமும் பின்னணி இசை மிக பரபரப்பாக இருக்கும். தொடர்ந்து 5 நிமிடம் இப்படி பரபரப்பான அமானுஷ்ய பின்னணி இசை வேறு படத்தில் இருக்கிறதா என்றால் எனக்குத் தெரிந்து பெரும்பாலும் இல்லை. அப்படி இருந்தால் சந்தோஷமே.

ஆங்கிலப் பெயர் கலப்பில்லாமல் இப்படி ஒரு சுத்தமான பெயர் வைத்து, டைட்டிலையே பரபரப்பாக்கி இருப்பார் பாக்யராஜ். எப்படி ஆயினும் இதுபோல சிறப்பான படங்கள் வந்த நாட்கள் திரும்பப்போவது கிடையாது.

நன்றி: பேஸ்புக் பதிவு