நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என பல பரிணாமங்களைக் கொண்டவரான ராஜூ சுந்தரம், தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் பணியாற்றிய புகழ்பெற்ற நடன இயக்குநரான சுந்தரம் மாஸ்டரின் மூத்த மகன்.
அதேபோல், நடிகரும் இயக்குநருமான பிரபு தேவாவும் நாகேந்திர பிரசாத்தின் இவரது சகோதரர்கள் என்பது நாம் அறிந்த ஒன்று.
கன்னட சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் ராஜ்குமாரின் திரைப்படங்களுக்கு இவர்களது தந்தை நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
ராஜூ சுந்தரம் அஜித்தின் ‘ஏகன்’ திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
இவர் நடன இயக்குனராக இருந்தாலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அக்னி நட்சத்திரம், ரோஜா, இதயம், ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், என் சுவாசக் காற்றே, பூவெல்லாம் கேட்டுப்பார், பெண்ணின் மனதைத் தொட்டு, ஐ லவ் யூ டாராஜூ, 123,
உள்ளம் கேட்குமே, அந்நியன், உன்னாலே உன்னாலே, எங்கேயும் காதல், வேட்டை, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் ஜீன்ஸ், ஐ லவ் யூ டா, ஒன் டூ த்ரீ போன்றவை புகழ்பெற்றவை.
பெரும்பாலும் நகைச்சுவை கதாப்பாத்திரங்களே இவருக்கு அமைந்தது.
இவர் நடன இயக்குநராகப் பணியாற்றி தானும் நடனமாடியுள்ள பல பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன.
அவற்றின் சில பாடல்களின் தொகுப்பு.
“ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே..” வந்த புதுசுல சரியான Hype குடுத்த பாட்டு.. இப்பவும் கூட..