இந்த ஆண்டில், அஜித், மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
விடாமுயற்சி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் தோல்விப்படமாக அமைந்தது. ஆனால், ‘குட் பேட் அக்லி’ அஜித் ரசிகர்ளை திருப்திப்படுத்தியது. வசூலும் குவித்தது.
தற்போது கார் ரேஸில் ஈடுபட்டுள்ள அஜித், தனது அடுத்த படத்தை இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ட் செய்கிறார்.
பார்சிலோனாவில் உள்ள அஜித், தற்போது புதிய தோற்றத்தில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சுத்தமாக வெட்டப்பட்ட மொட்டைத் தலையுடன் அவர் அங்கு வலம் வருகிறார்.
இந்தியாவில், இந்த சிகை அலங்காரம் ‘பேபி கட்டிங்’ என்று அழைக்கப்படுகிறது. அவரது இந்த புதிய தோற்றம் சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இந்த புதிய கெட்டப்பை அவர் தனது அடுத்த படத்தில் பயன்படுத்த இருப்பதாக தகவல்.
– பாப்பாங்குளம் பாரதி.