Take a fresh look at your lifestyle.

தமிழ் சினிமா மேல் வருத்தம்!

நடிகை கனிகாவின் ஆதங்கம்

கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ஃபவ் ஸ்டார்’ என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கனிகா. எதிரி, ஆட்டோகிராஃப், வரலாறு உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தார்.

கடந்த ஆண்டு வெளியான விஜயின் கோட் படத்தில் வில்லன் மோகனின் மனைவியாக கேமியோ ரோலில் நடித்திருந்த கனிகா, சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் மருமகள் கேரக்டரில் நடித்து வருகிறார்.

அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன், தனது கருத்துக்களை வெளியிட்டு வரும் கனிகா, நேர்காணல் ஒன்றில் தமிழ் சினிமா குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“எனக்கு திருமணம் நடந்த அடுத்த நாளே என்னிடம் வந்து இனி நீங்க ஹீரோவுக்கு அண்ணி கேரக்டரில் நடிக்கிறீங்களா? அக்கா கேரக்டரில் நடிக்கிறீங்களா? என்று கேட்டார்கள்.

எனக்கு அது வருத்தமாக இருந்தது. அந்த நேரத்தில் எனக்கு மலையாள சினிமாதான் அழகான வாய்ப்புகளைக் கொடுத்தது. என்னை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள்.

அவர்கள், என்னை எந்த விதத்திலும் குறை சொல்லவில்லை.

நீங்க அம்மாவாக இருக்கீங்க, கல்யாணம் ஆயிடுச்சு என்று ஒதுக்கி வைக்கவும் இல்லை என்னைக் குறைத்து மதிப்பிடவும் இல்லை.

என் திறமைக்கு தகுந்த மாதிரி நல்ல நல்ல படங்களுக்கான வாய்ப்பு வந்தது. இதற்காக நான் எப்போதும் மலையாள சினிமாவுக்கு நன்றி சொல்வேன்.

தமிழ் சினிமா மேல் கோபம் இருக்கிறது. ஆனாலும் இப்போது கொஞ்சம் மாறி இருக்கு. நான் பார்வைக்கு நன்றாகத்தான் இருக்கிறேன். மேலும் மேலும் திறமையை வளர்த்துக் கொள்கிறேன்.

ஆனாலும் நம்முடைய திறமைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காதபோது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது என்று கனிகா அந்த நேர்காணலில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

– பாப்பாங்குளம் பாரதி