உலகநாயகன் கமல்ஹாசனும், இயக்குனர் மணிரத்னமும் இணைந்து பணியாற்றி வரும் படம் ‘தக் லைஃப்’. கடந்த ஜனவரியில் தொடங்கிய படப்பிடிப்பு, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், தேதி பிரச்சினையைக் காரணம் காட்டி துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இந்தப் படத்திலிருந்து முன்பே வெளியேறினர்.
துல்கர் சல்மானின் கதாபாத்திரத்திற்கு பதிலாக சிம்பு நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ‘STR 48’ படத்திற்காக நீண்ட முடி கொண்ட தோற்றத்தில் இருந்த அவர் தற்போது ‘தக் லைஃப்’ படத்துக்கான தோற்றத்தை மாற்றுகிறார்.
‘STR 48’ படத்தைப் பொறுத்தவரை, ‘தக் லைஃப்’ படத்தில் தனது பகுதிகளை முடித்த பிறகு, சிம்பு நீண்ட முடி கொண்ட கெட்டப்பில் திரும்புவார் என்றும் ‘தக் லைஃப்’ முடிந்த பிறகுதான் ‘STR 48’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
சிலம்பரசன் இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘STR 48’ ஒரு ஃபேன்டஸி படமாக இருக்கும். ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தை தேசிங் பெரியசாமி இயக்குகிறார்.
– தேஜேஷ்