‘ஹரா’ பட டீசர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு:
தமிழ்த் திரையுலகில் அதிக எண்ணிகையில் வெள்ளிவிழா படங்கள் தந்த, நடிகர் மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் நாயகனாக களமிறங்கும் திரைப்படம் ‘ஹரா’.
கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்.
மாறுபட்ட களத்தில், ஆக்ஷன் அதிரடிப் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் விஜய் ஸ்ரீ ஜி. விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டு பத்திரிகையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் S P மோகன் ராஜ், இப்படம் நாங்கள் தயாரிக்கும் இரண்டாவது படம், முதல் படம் ‘பவுடர்’. இப்படம் முழுக்க முழுக்க கோயம்புத்தூரில் படமாக்கப்பட்டுள்ளது. மோகன் சாருக்கு அங்கு மிகப்பெரிய வரவேற்பு. படம் நன்றாக வந்துள்ளது. மோகன் சிறப்பாக நடித்துள்ளார்” என்றார்.

இதை அடுத்து பேசிய நாயகி அனுமோல்: நான் மோகன் ஆக்டிங் பார்த்து தான் நடிக்க கற்றேன். அவர் பாடல்கள் எல்லாம் எனக்கு அவ்வளவு பிடிக்கும்.
எல்லாப் படத்திற்கும் கதை கேட்டால் தான் எக்ஸைட் ஆவார்கள், ஆனால் இந்தப்படத்தில் மோகன் சார் நடிக்கிறார் என்றவுடனே நான் எக்ஸைட் ஆகிவிட்டேன்.
அவருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். படத்தில் அசத்தியுள்ளார். இயக்குநர் மிகக் கடினமாக உழைத்துள்ளார்.
ஆக்சிடெண்ட்டில் அவர் உடம்பில் 12 பிளேட் வைத்திருக்கிறார்கள், ஆனாலும் எப்போதும் படம், படம் என்றே இருப்பார்.” என்றார்.
இயக்குநர் விஜய் ஶ்ரீஜி: மோகன் மிகப்பெரிய ஆளுமை, ஆனால் ஒரு துளி கர்வம் கூட அவரிடம் இருக்காது.
இந்தப் படத்திற்காக பேசும்போது, அவருக்கு என்ன மார்க்கெட் இருக்கிறது, அவரை வைத்து ஏன் படமெடுக்கிறீர்கள் என்று கேட்டார்கள், ஆனால் கோயம்புத்தூரில் ஷூட் செய்யும்போது எங்கு போனாலும் 500 பேர் அவரைப் பார்க்க கூடி விடுவார்கள்.
அவர் வந்தால் தெரியும் அவர் மார்க்கெட் என்னவென்று. அவருக்கு இந்த ‘ஹரா’ மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும். நாம் பல இடங்களில் சீட் பெல்ட் போடுவதில்லை, கவனம் இல்லாமல் இருக்கிறோம், அதற்காகத் தான் இதைச் சொல்கிறேன்.
முடிவில் பேசிய நடிகர் மோகன்: எத்தனையோ படம் நடித்திருக்கலாம், ஆனால் நான் பெருமையாக சொல்லிக் கொள்கிறேன். நான் நடித்த படங்கள் எல்லாம் லிஸ்ட் வைத்துக் கொண்டதே இல்லை. ‘ஹரா’ தான் என் முதல் படம்.
நான் நடிக்க ஆரம்பித்த போது, எனக்கு என மார்க்கெட் வாய்ப்பு வந்த பிறகு, எப்போதும் என்னால் முடிந்த அளவு புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு தந்துள்ளேன்.
அவர்களுக்கு வாய்ப்பு தந்தால் பசியோடு வெறியோடு படம் செய்வார்கள் என்று தான் நினைத்துள்ளேன்.
என்னுடைய பாட்டுகள் பற்றி எல்லோரும் சொல்கிறார்கள் ஆனால், அதற்கு காரணம் இசைஞானி, அவர் யாருக்கும் வஞ்சனை இல்லாமல் பாட்டு தந்துள்ளார்.
எல்லா நடிகர்களுக்கும் ஒரே மாதிரி பாடல் தந்துள்ளார். ஆனால் அந்தப் பாடல்களில் என்னை ரசிக்கிறார்கள் என்றால் அதை ஆர் சுந்தர்ராஜன் மாதிரி இயக்குநர்கள் இயக்கியது தான் காரணம்.
அவர்கள் தான் மக்களை உணர்ந்து ஃபீல் செய்வது மாதிரி படம் எடுத்து வெற்றிப்பெறச் செய்தார்கள். அதனால் தான் மக்கள் என்னை தங்கள் பிள்ளை போல் கொண்டாடினார்கள். என்னை வைத்து இயக்கிய இயக்குநர்கள், இசையமைப்பாளர் எல்லோரும் தான் என் வெற்றிக்கு காரணம்.
நான் எப்போதும் மார்க்கெட்டைப் பற்றி யோசிக்கவே மாட்டேன், ஒரு படம் என்றால் அது எனக்குப் பிடிக்க வேண்டும் அவ்வளவு தான். நிகில் தான் விஜய் ஶ்ரீயை கூட்டி வந்தார். எனக்கு திரைக்கதையில் சில தயக்கங்கள் இருந்தது, அதை மனமுவந்து மாற்றினார்.
7 முறை மாற்றி தான் இந்தப்படத்தை எடுத்துள்ளோம். ஏன் ஹராவை ஒத்துக்கொண்டீர்கள் என எல்லோரும் கேட்டார்கள். விஜய்ஶ்ரீயிடம் ஒரு ஃபெண்டாஸ்டிக்கான லைட் அண்ட் சவுண்ட் சென்ஸ் இருக்கிறது. அந்த திறமை அவரை பெரிய அளவிற்கு கொண்டு செல்லும்.

விஜய் ஶ்ரீ அவருக்கு என்ன ஆனாலும், படத்தைப் பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டு இருப்பார். அவர் பிழைத்து வரக் காரணம் அவர் மனைவி, குழந்தைகள் புண்ணியம் தான்.
அவர் இன்னும் நிறைய நல்லப் படங்கள் தருவார். இந்தப்படத்தில் முதலில் பாடல்கள் இல்லை ஆனால் மூன்று பாடல்கள் வைத்துவிட்டார், மூன்று பாடல்களையும் அவரே எழுதியுள்ளார்.
மணிவண்ணன் மாதிரியான அறிவு கொண்டவர், மணிவண்ணன் தான் பேப்பரில் கதை இல்லாமல் எடுப்பார். ராஜிவ் மேனன் சாரை கேமராமேனாக பார்த்திருக்கிறேன் அவருடன் இணைந்து நடித்துள்ளேன்.
‘ஹரா’ திரைப்படத்தில் யோகி பாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ் மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். இசை: ரஷாந்த் அர்வின், ஒளிப்பதிவு: பிரகத் முனியசாமி, படத்தொகுப்பு: குணா.
#நடிகர்_மோகன் #Actor_Mohan #ஹரா #Hara #டீசர் #Teaser #எஸ்_பி_மோகன்_ராஜ் #Producer_SP Mohan_raj #ஜி_மீடியா_ஜெய_ஸ்ரீ_விஜய் #Ji_Media_Jaya_sri_vijay #இயக்குநர்_விஜய்_ஸ்ரீ_ஜி #Director _Vijay_Sri_Ji #நடிகர்_சிங்கம்_புலி #Actor_Singam_Puli #ஆதவன் #Aadhavan #அனித்ரா #Anithra #ஸ்வாதி #Swathi #யோகி_பாபு #Yogi_babu #சாருஹாசன் #Charu_Haasan #சுரேஷ்_மேனன் #Suresh_Menon #வனிதா_விஜயகுமார் #Vanitha_Vijayakumar #அனுமோல் #Anumol