Take a fresh look at your lifestyle.

வெளியானது சூர்யாவின் ‘கங்குவா’ போஸ்டர்!

ஸ்டூடியோ கிரீன் மற்றும் சூர்யா இருவரும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘கங்குவா’ படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் வெறித்தனத்தைத் தூண்டியுள்ளது.

டீசரின் சத்தம் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. சூர்யா வலிமைமிக்க வீரராகவும், பாபி தியோல் எதிரியாகவும் காணப்படுவது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

உற்சாகத்தை மேலும் தூண்டுவதற்காக, தயாரிப்பாளர்கள் தமிழ் புத்தாண்டின்போது ‘கங்குவா’-வின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

படத்தின் கதையில் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையே ஒரு கவர்ச்சிகரமான இடைவெளியைக் குறிக்கும் வகையில், இரட்டை அவதாரங்களில் சூர்யாவைக் காண்பிக்கும் வசீகரிக்கும் புதிய போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

புதிய போஸ்டரில் சூர்யா இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் அவரது கதாபாத்திரத்தின் கடந்தக் கால மற்றும் தற்போதைய அடையாளங்களைக் குறிப்பிடுகிறார்.

‘கடந்த காலமும் நிகழ்காலமும் மோதும் இடத்தில், ஒரு புதிய எதிர்காலம் தொடங்குகிறது. கங்குவா உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இந்த ஆண்டு வெளியிடுகிறது.

தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்ற தலைப்புடன் இந்தப் போஸ்டர் நேரத்தையும் இடத்தையும் கடந்து ஒரு உற்சாகமான பயணத்திற்கு களம் அமைக்கிறது.

‘கங்குவா’ மனித உணர்வுகள், சக்திவாய்ந்த நடிப்புகள் மற்றும் இதுவரை கண்டிராத ஆக்‌ஷன் காட்சிகள் ஆகியவற்றால் பார்வைக்கு பிரமிக்க வைக்கும் அனுபவத்தை மிகப்பெரிய அளவில் வழங்குவதாக உறுதியளிக்கிறது.

வெற்றி பழனிசாமியின் ஒளிப்பதிவு மற்றும் ‘ராக்ஸ்டார்’ தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையமைப்புடன் படம் பார்வையாளர்களை கவரும் வகையில் தயாராக உள்ளது.

‘கங்குவா’ ஒரு பிளாக் பஸ்டருக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. மேலும் புதிய போஸ்டர் மறக்க முடியாத சினிமா அனுபவமாக இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.

– தேஜேஷ்