Take a fresh look at your lifestyle.

மீண்டும் ‘அட்டகத்தி’ தினேஷை இயக்கும் பா.ரஞ்சித்!

தமிழ் சினிமாவில் மிகவும் பாராட்டப்பட்ட இயக்குனர்களில் ஒருவர் பா ரஞ்சித். அவர் தனது முதல் படத்தின் ஹீரோவான ‘அட்டகத்தி’ தினேஷை மீண்டும் ஒரு புதிய படத்தில் இயக்கவுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.

பா.ரஞ்சித் மற்றும் தினேஷ் இணைந்து 2012 ஆம் ஆண்டில் ‘அட்டகத்தி’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்தனர்.

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தில் தினேஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். பா.ரஞ்சித் தயாரிப்பில் தினேஷ் நடித்த ‘ஜே பேபி’ இந்த மாத தொடக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனிடையே ‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் விரைவில் ஒரு படத்தை பா.ரஞ்சித் செய்யவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு 45 நாட்களுக்கு திட்டமிடப்பட்டு ஏப்ரலில் பணிகள் தொடங்கும் என்றும் அது, 2022 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் ரஞ்சித்தால் அறிவிக்கப்பட்ட ‘வெட்டுவம்’  என்ற தலைப்பிலான படம் என்றும் கூறப்படுகிறது.

தற்போது சீயான் விக்ரமின் ‘தங்கலான்’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் பிஸியாக உள்ளார் பா.ரஞ்சித். இது தேர்தலுக்குப் பிறகு திரைக்கு வரவுள்ளது.

– தேஜேஷ்