Take a fresh look at your lifestyle.

செம்மங்குடியார் வீட்டுக்குள் நுழைந்ததே கிடையாது!

- பாடகர் கே.ஜே.ஜேசுதாஸின் அனுபவம்

“என் தந்தையை நாடக உலகிற்கு அறிமுகப்படுத்திய கிருஷ்ணன்குடி நாயரின் உதவியால், செம்மங்குடி சாமியின் மறைமுக அனுமதியின் பேரில், சாமியின் கார் ஷெட்டில் போய்த் தங்கினேன்.

சரியாக ஒரு வருடம், என்னை எந்த வேலையும் செய்யுமாறு அவர் கட்டளையிடவில்லை.

ஆனாலும் என் மனத் திருப்திக்காக அவர் காரைக் கழுவித் துடைத்துப் பாலீஷ் செய்வேன்.

செம்மங்குடி குடும்பத்தார் ஆசாரமானவர்கள் என்பதால் அவர்கள் வீட்டுக்குள் நான் நுழைந்ததே கிடையாது.

ஆனால் செம்மங்குடி குடும்பத்தாரின் மதிப்பில் உயர்வதற்கு என்னை நானே பக்குவப்படுத்திக் கொண்டேன்”

_ 09.08.1990 ல் குமுதம் இதழில் ஜேசுதாஸ் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.