Take a fresh look at your lifestyle.

ரோல் மாடலுக்கு மரியாதை செலுத்திய அஜித்!

68

நடிகர் அஜித்குமார் தற்போது ஐரோப்பாவில் நடக்கும் GT 4 சீரிஸ் கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். கார் ரேஸில் முழு கவனம் செலுத்துவதால் படங்களில் நடிப்பதற்கு இடைவெளி விட்டு இருக்கிறார்.

இந்த ஆண்டு நவம்பரில் தான் தனது அடுத்த பட ஷூட்டிங் தொடங்கும் என அஜித் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அஜித் நேற்று (மே-20) தனது ரோல் மாடலான, பிரேசில் கார் ரேஸர் அயர்டன் சென்னாவின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

இத்தாலின் இமோலா நகரில் உள்ள அவரது சிலையின் பாதத்திற்கு முத்தமிட்டு, அவரது சிலைக்கு முன்பு மண்டியிட்டு வணங்கி இருக்கிறார்.

பார்முலா ஒன் கார் ரேஸில் முன்னணியில் இருந்த அயர்டன் சென்னா, 1994 சான் மாரினோ கிராண்ட் பிரிக்ஸ்-ல்(San Marino Grand Prix) நடந்த விபத்தில் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.