Take a fresh look at your lifestyle.

‘தாவுத்’ சண்டைக் காட்சிகள் இல்லாத கேங்ஸ்டர் படம்!

கேங்ஸ்டர் படம் என்றாலே அடிதடி, வெட்டுக் குத்து என சண்டைக் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது.

ஆனால், தற்போது தாவுத்’ என்ற பெயரில் அடிதடி, வெட்டுக் குத்து சண்டைக் காட்சிகளே இல்லாத ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் படம் உருவாகிறது.

இதில், பரோல், உடன்பால், பெண்குயின், சேதுபதி போன்ற படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த லிங்கா காதநாயகனாக நடித்துள்ளார்.

சாரா ஆச்சர் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

வத்திகுச்சி, காலா போன்ற படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த திலீபன், ராதாரவி, சாய் தீனா, ஸாரா, வையாபுரி, சரத்ரவி, அர்ஜெய், அபிஷேக், ஆனந்த் நாக், ஜெயகுமார், சேரன்ராஜ், சரவணன் சீலன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு சரத் வளையாபதி மற்றும் பிரேண்டன் சுஷாந்த் இருவரும் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர்.

அருண் பாரதியில் பாடல் வரிகளுக்கு ராக்கேஷ் அம்பிகாபதி இசையமைத்துள்ளார்.

R. K. ஸ்ரீநாத் எடிட்டிங் செய்ய, கலை இயக்கத்தை ஜெய் முருகன் மேற்கொள்ள, ஸ்ரீக்ரிஷ் நடனம் அமைத்துள்ளார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் பிரசாந்த் ராமன்.

இப்படம் பற்றிப் பேசிய இயக்குநர், யூஸ்வலான சேஸிங், ஃபைட் அந்த மாதிரி இல்லாத ஒரு கேங்ஸ்டர் படம் இது. புது டைப் காமெடி கலந்து ஒரு ஃபேமிலி பேக்கேஜாக இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன்.

இதுவரை யாரும் திரையில் பார்த்திராத ஒரு புது அனுபவத்தை தரக்கூடியா கேங்ஸ்டர் படமாக இது இருக்கும். குறிப்பாக இன்றைய இளைஞர்களைக் கவரக்கூடிய வகையில் உருவாக்கி இருக்கிறோம்.

இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் வெள்ளித்திரையின் தாவுத்தை சந்திக்கலாம்” என்றார் இயக்குநர் பிரசாந்த் ராமன்.