Take a fresh look at your lifestyle.

என்னைக் கவர்ந்த மிகச்சிறந்த படம்!

'டூரிஸ்ட் ஃபேமிலி' பற்றி அமைச்சர் மா. சுப்பிரமணியம்

“டூரிஸ்ட் ஃபேமிலி (Tourist Family) என்ற படம் என் மனதை மிகவும் ஈர்த்தது.

அக்கம் பக்கத்திலே இருப்பவரோடு மனிதாபிமான உறவோடும் பேரன்போடும் வாழும் வாழ்க்கையைப் போதிக்கிறது இப்படம்.

படத்தின் நாயகன் சசிகுமார் பேரன்பும், இரக்கமும், உதவும் குணமும் உள்ளவராய் நடித்துள்ளார்… இல்லை.. இல்லை வாழ்ந்தே காட்டியுள்ளார்.

“நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்” என்பதைக்காட்டும் அற்புதமான படம்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் தியேட்டர்களில் படம் பார்க்கும் இயல்புடைய நான் இன்று மதியம் குடும்பத்தினருடன் சென்று படம் பார்த்தேன்.

படம் முடிந்து வெளிவந்தவுடன் நடிகர் சசிகுமார் அவர்களிடமும், இயக்குநர் அபிசன் ஜீவிந்த் அவர்களிடமும் அலைபேசியின் வாயிலாக என்னுடைய மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் பரிமாறிக்கொண்டேன்.”