Take a fresh look at your lifestyle.

சிம்புவுக்காக மனம் மாறிய சந்தானம்!

டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் புதிய படத்தில், சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். இது சிம்புவுக்கு  49வது படம்.

ஹரீஷ் கல்யாண், இந்துஜா நடிப்பில் ஹிட்டான ‘பார்க்கிங்’ என்ற படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

கல்லூரியைக் கதை களமாகக் கொண்ட கமர்ஷியல் படம். இதில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கல்லூரி மாணவனாக சிம்பு நடிக்கிறார். 

சிம்பு மூலம் திரை உலகில் காமெடி நடிகராக அறிமுகமான சந்தானம். தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார்.

எனினும், சிம்புவுக்காக இந்தப் படத்தில் சந்தானம் மீண்டும் காமெடி வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.

கடைசியாக சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்தில் சந்தானம் நடித்திருந்தார். சந்தானம் ஹீரோவாக நடித்திருந்த ‘சக்கப் போடு போடு ராஜா’ என்ற படத்துக்கு சிம்பு இசை அமைத்திருந்தார்.

‘டிராகன்’ என்ற ஒரே படத்தின் மூலம் பிரபலமான கயாடு லோஹர், சிம்பு ஜோடியாக இந்தப் படத்தில்  நடிக்கிறார்.

முக்கியமான வேடத்தில் விடிவி கணேஷ் நடிக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, சாய் அபயங்கர் இசை அமைக்கிறார்.

அண்மையில் இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

– பாப்பாங்குளம் பாரதி.