Take a fresh look at your lifestyle.

விஜய்யின் அமைதிக்குப் பின்னிருக்கும் ஜென் தத்துவம்!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக உருவாகியிருக்கும் ‘இளையத் தளபதி’ விஜய், திரைப்படங்களில் ஆக்ஷன், நகைச்சுவை உள்ளிட்ட காட்சிகளில் துறுதுறுவென்ற கதாபாத்திரங்களில் நடித்து, ரசிகர்களின் மனதில், நீங்கா இடத்தைப் பிடித்துள்ளதோடு இன்றுவரை உச்சநட்சத்திரமாகவும் இருக்கிறார்.

திரைப்படங்களில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் விஜய், படப்பிடிப்பு தளத்தில் தனக்கான படப்பிடிப்பு இல்லாத சமயங்களிலும் மற்ற பொது நிகழ்ச்சிகளிலும், அரிதாகப் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் மிக அமைதியாக இருப்பதைப் பார்த்து இருக்கிறோம்.

படங்களில் பார்த்த, துறுதுறுவென்ற விஜய்யா இது! என்று ஆச்சரியப்படும் அளவிற்கு பொது இடங்களில் மிக மிக அமைதியாக இருப்பார்.

இந்தநிலையில், விஜய்யின் இந்த அமைதிக்குப் பின்னால் இருக்கும் காரணம் பற்றி விகடன் இதழ், ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.

அதில்,  “விஜய் அதிகம் பேசுவதில்லை என்று சொல்வார்கள். ஆனால், வாதம் பண்ணலாம். விவாதம் பண்றது தனக்குப் பிடிக்காது.

விவாதம் பண்ணும்போது ஜெயிப்போம். ஆனால் நல்ல மனிதர்களை இழந்துவிடுவோம்” என்று விஜய் தன் நண்பர்களிடம் சொல்லியதாகப் பதிவிட்டுள்ளது.

விஜய்யின் அமைதிக்கு இப்படியொரு காரணம்!