Take a fresh look at your lifestyle.

நானி படத்தில் நடிக்கும் அதிதி பாலன்!

நானியின் நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள ‘சரிபோத சனிவாரம்’ படம் தமிழில் 'சூர்யாவின் சனிக்கிழமை' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அருவி பட நாயகி அதிதி பாலன் இணைந்துள்ளார்.

ராயன் மூன்று நாள் வசூல் ரூ. 42 கோடி!

தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படத்தின் வசூல் வேட்டையில் இரண்டாம் நாளில் 13 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது. அதாவது வெளியான 3 நாட்களில் இந்தப் படத்தின் மொத்த வசூல் 42 கோடி ரூபாய் என தகவல் வெளியாகி உள்ளது.

பிரபாசுக்கு ஜோடியாகும் மிருணாள் தாகூர்!

'சீதா ராமம்' படத்தை இயக்கிய ஹனு ராகவபுடியின் அடுத்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் பாகிஸ்தான் நடிகை சஜல் அலி நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் மிருணாள் தாகூர் நாயகியாக நடிக்க இருப்பதாகத் தகவல்கள்…

‘கூலி’ படத்தில் நடிக்க மறுத்த நாகர்ஜுனா!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 'கூலி' படத்தில் தெலுங்கு ஹீரோ நாகர்ஜுனா ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அவர் வில்லனாக நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்று மறுத்துவிட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

ஆண்டவன் தூங்கிடும்போது யாரிடத்தில் கேள்வி கேட்பது?

-1968-ம் ஆண்டு ஒளிப்பதிவு மேதை ஏ.வின்சென்ட்டின் இயக்கத்தில் கருப்பு வெள்ளையில் உருவான திரைப்படம் 'துலாபாரம்'. இந்தப் படத்தில் இடம்பெற்ற "காற்றினிலே பெரும் காற்றினிலே" என்ற வரிகளை எழுதியவர் கவியரசு கண்ணதாசன்.

துன்பங்களை எதிர்கொள்ள வேண்டும்!

வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு கஷ்டத்தையும் எதிர் கொள்ளத்தான் வேண்டும். அப்படி எதிர்கொள்ளும்போதுதான் வாழ்க்கையை வெற்றிக்கொண்டதாக அர்த்தம் என நடிகை சமந்தா அண்மையில் அளித்த நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.

ஸ்ருதி ஹாசன் – ‘பார்முலா’வில் இருந்து வேறுபட்ட திரைத் தாரகை!

திரை உலகிற்கு வந்து 15 ஆண்டுகளாகியும் ஸ்ருதி ஹாசனின் இருப்பு திரைத்துறையில் இருக்கிறது என்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது!

டெட்பூல் & வோல்வரின் – சூப்பராக இருக்கிறதா? மொக்கை போடுகிறதா?

ஹாலிவுட்டில் தயாராகும் அனைத்து படங்களும் உலகம் முழுக்க வெளியாவதில்லை. ஆக்‌ஷன், ரொமான்ஸ், காமெடி கலந்த திரைப்படங்கள் அவ்வப்போது பரவலான வரவேற்பைப் பெற்றாலும், சூப்பர்ஹீரோக்களை காட்டும் ‘அட்வெஞ்சர்’ வகைமை படங்கள் மட்டுமே உலகம் முழுக்க…

தங்கலானில் நடித்த பிறகு 5 மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றேன்!

'தங்கலான்' படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் நேர்காணலில் பேசிய நடிகை மாளவிகா. எனது கதாபாத்திரத்துக்காக பல மணி நேரம் மேக்கப் போட வேண்டியிருந்தது. அதிக நேரம் மேக்கப்பில் இருந்ததால் எனக்கு சொறி ஏற்பட்டது. இப்படத்தில்…

நடிகையாக என் முழுத் திறனையும் வெளிப்படுத்திய படம் ‘ஜமா’!

"ஒரு நடிகையாக என் முழுத்திறனையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு 'ஜமா' படத்தில் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என நடிகை அம்மு அபிராமி 'ஜமா' படத்தில் நடித்தைப் பற்றிப் பேசியுள்ளார்.