பன்முகத்தன்மை கொண்ட தனுஷ் இயக்கி நடித்துள்ள புதிய படம் ‘ராயன்’. அவர் இயக்கியுள்ள இரண்டாவது படம். அவரது நடிப்பில் வெளிவந்துள்ள 50-வது படம் என்பது கூடுதல் தகவல்.
100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, பிரகாஷ் ராஜ், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான ‘ராயன்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் குறை வைக்கவில்லை.
இந்த நிலையில் ராயனுக்கு போட்டியாக மறுநாள் (சனிக்கிழமை) ‘DEED POOL-WOLUERINE’ என்ற ஆங்கிலப் படம் தமிழ்நாட்டில் ரீலீஸ் ஆனது.
மற்ற படங்களின் வருகை, தனுஷ் படத்துக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
முதல் நாளில் ‘ராயன்’ 12 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது. இரண்டாவது நாளில் ரூ.13 கோடியும் மூன்றாவது நாளில் ரூ.20 கோடியும் வசூலித்துள்ளது. அதாவது வெளியான மூன்று நாட்களில் அந்தப் படத்தின் மொத்த வசூல் ரூ.42.50 கோடி.
இந்தச் செய்தியை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் போது ‘ராயன்’ வசூல் 45 கோடி ரூபாயை எட்டி இருக்கும் என்கிறார்கள் கோடம்பாக்கம் வட்டாரத்தில்.
– பாப்பாங்குளம் பாரதி.