சுந்தர்.சி நாயகனாகவும், அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடிக்கும் புதிய படத்துக்கு ‘ஒன் டூ ஒன்’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் விஜய் வர்மன், நீது சந்திரா, ராகினி திவேதி, மானஸ்வி, ரியாஸ்கான் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை திருஞானம் டைரக்டு செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப் பணிகள் நடக்கின்றன.
இப்படத்தைப் பற்றிப் பேசிய திருஞானம், “ஆக்ஷன் திரில்லர் கலந்த படமாக உருவாகி உள்ளது. வங்கியில் பணியாற்றுகிறார் சுந்தர்.சி. அங்குள்ள லாக்கரில் ஒரு பெட்டியைக் கொண்டுவந்து ஒருவர் வைக்கிறார்.
அதன்பிறகு என்ன நடக்கிறது? என்பது கதை. சுந்தர்.சி மனைவி கதாபாத்திரத்தில் ராகினி திவேதி நடித்துள்ளார். இவர்களுக்கு மகளாக பேபி மானஸ்வி வருகிறார்.
குழந்தைக்குத் தாயாக நடிக்க பல நடிகைகளைத் தொடர்பு கொண்டும் யாரும் சம்மதிக்கவில்லை. அதன்பிறகு ராகினி திவேதியைத் தேர்வு செய்தோம். படம் விரைவில் திரைக்கு வர உள்ளது” என்றார்.
இசை: சித்தார்த் விபின். இந்தப் படத்துக்கு எஸ்.கே.ஏ.பூபதி கார்த்தி, பிரவீன் நித்தியானந்தம், விக்ரம் மோகன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
– நன்றி: தினந்தந்தி.