Take a fresh look at your lifestyle.

மாற்றுத்திறனாளியின் ஆசையை நிறைவேற்றிய நெப்போலியன்!

பிரபல தமிழ் நடிகரான நெப்போலியன் பல படங்களில் வில்லனாகவும் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் சீவலப்பேரிபாண்டியும், எட்டுப்பட்டி ராசாவும் அவருக்கு மணிமகுடமாக அமைந்தன.

சினிமாவில் வில்லனாக பல படங்களில் நடித்துள்ள நெப்போலியன், நிஜவாழ்க்கையில் பலருக்கும் ரோல் மாடல் என்று சொல்லும் அளவிற்கு பல உதவிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார்.

ஒரு காலத்தில் எம்பியாகி மத்திய அமைச்சராகவும் இருந்தார். அதன்பின்னர் மகனுக்காக சினிமா அரசியல் என இரண்டையும் விட்டுவிட்டு அமெரிக்காவிற்குச் சென்று குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார்.

தனது மூத்த மகள் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக சென்னை வந்துள்ள நெப்போலியன், மத்திய அரசின் தேசிய விருது பெற்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளியான சினிமா பின்னணி பாடகி ஜோதியினுடைய அமெரிக்கா சென்று பாட வேண்டும் என்ற ஏழு ஆண்டு கனவை நிறைவேற்றி நெகிழச் செய்துள்ளார்.

பாடகி ஜோதி அமெரிக்கா செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளார். அமெரிக்கா சென்று இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் பாடகி ஜோதி சென்னையில் இருக்கும் நெப்போலியனுடன் வீடியோ காலில் பேசி நன்றித் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி நெப்போலியனுக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகிறார்கள்.