கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில், நடிகர்கள் மாதவன், சத்யராஜ், துஷாரா விஜயன், அதிதி பாலன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியாகிறது.
புரட்சிகர தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கொடையாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையைக் கொண்டாடும் ‘ஜிடிஎன்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இதில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் பேசும்போது, “கோயம்புத்தூரிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் இத்தனை நாட்களாக ஜி.டி. நாயுடு மியூசியத்தை சென்று பார்க்கவில்லையே என்ற குற்றவுணர்வு இந்தப் படத்தில் நடிக்கும்போது எழுந்தது.
ஒவ்வொரு காட்சியிலும் நடிக்கும்போது இப்படி எல்லாம் நடந்திருக்கிறதா என்று ஆச்சரியமாக இருந்தது.
ஒரு கமர்ஷியல் படத்திற்கு தேவையான விஷயங்களை விடவும் ஒருபடி அதிகமான விஷயங்கள் இந்தப் படத்தில் இருக்கிறது.
உலகம் முழுவதும் இந்தப் படம் நிச்சயம் சாதனை செய்யும். ஏனெனில், ஜி.டி. நாயுடுவை ஒரு தமிழராக, இந்தியராக சுருக்கிவிட முடியாது.
இதை மாதவன் எடுத்து நடித்த விதம் ஆச்சரியமானது. எனக்கு ராமய்யா பிள்ளை என்ற கதாபாத்திரம்.
இதுவரை பயோபிக்கிலேயே இந்த படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்ற நம்பிக்கை உண்டு.
இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய முக்கிய காரணம் ஜி.டி. நாயுடுவின் குடும்பம் தந்த ஒத்துழைப்புதான். ஜி.டி. நாயுடுவை போலவே இந்த படமும் பல புதுமையான விஷயங்களைக் கொண்டு வந்துள்ளது” என்றார்.