Take a fresh look at your lifestyle.

விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது!

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மறைந்து அவரது தொண்டர்களை மீளாத் துயரில் ஆழ்த்தினார். அவரது மறைவுக்கு பல ஊர்களில் இருந்து மக்கள் திரண்டு வந்து நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் தங்கள் இறுதி மரியாதையைச் செலுத்தினர். இன்று வரையிலும் சென்னையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். அவரது நினைவிடத்தை கேப்டன் கோயிலாக அவரது தொண்டர்கள் வழிபட்டு வருகின்றனர்.

இப்படியான சூழ்நிலையில்தான் அவரது நினைவிடம் உலக சாதனை படைத்துள்ளது. அதாவது, கடந்த 125 நாட்களில் தமிழகம் முழுவதும் இருந்து 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இங்கு வந்து சென்றுள்ளனர். அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு பசியாற இங்கு உணவும் கொடுக்கப்படுகிறது.

அதனால், பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் முதல் நினைவுச் சின்னமாக விஜயகாந்த் நினைவிடம் உலக சாதனை படைத்துள்ளது.

இதனை லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அறிவித்து அதற்கான சான்றிதழையும் கொடுத்துள்ளது. இந்த விஷயம் விஜயகாந்தின் தேமுதிக தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.