Take a fresh look at your lifestyle.

வேறு மொழிகளில் நடிப்பது ஏன்?

மோகன்லால் விளக்கம்

மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் மோகன்லால், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். அவர் நடித்த மொத்தப் படங்களின் எண்ணிக்கை 350-ஐ தாண்டும்.

ஆரம்பத்தில் அவர் நடித்த தமிழ் சினிமாக்கள் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுக்கவில்லை.

பாப்கார்ன், ஜில்லா, காப்பான் ஆகிய படங்கள் ஆகச்சிறந்த உதாரணம். ரஜினியுடன் நடித்த ஜெயிலர் படம்தான் மோகன்லால்  நடித்து நன்றாக ஓடிய முதல் தமிழ்ப் படம்.

அண்மையில் மோகன்பாபு தயாரிப்பில் உருவான பான் இந்தியா படமான ‘கண்ணப்பா’ படத்தில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து மோகன்லால் நடித்துள்ளார்.

கண்ணப்பா படத்தில் நடித்திருப்பது பற்றி மோகன்லால் கூறியது:

“வெவ்வேறு மொழிகளில் உச்ச நடிகர்களாக உள்ளவர்களுடன் இணைந்து நடிப்பது எனக்கு புதிதல்ல.

நான் இதற்கு முன், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடத்தில் எல்லாம் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளேன்.

கண்ணப்பா படத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தித் திரை உலகில் இருக்கும் முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள். எனக்கு அவர்களுடன் காட்சிகள் இல்லை என்றாலும் இந்தப் படத்தில் நான் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது.

பல மொழிகளைச் சேர்ந்த ஸ்டார்கள் இணைந்து நடிக்கும்போது அவை சினிமாவில் உள்ள எல்லைகளைத் தகர்த்து விடுகிறது.

இதனால் ரசிகர்களுக்கு இடையில் இணக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ரசிகர்களாக உள்ள மக்கள் மத்தியிலும் வேறுபாடுகள் களைய வாய்ப்புகள் உள்ளன” என்கிறார்.

– பாப்பாங்குளம் பாரதி.