Take a fresh look at your lifestyle.

நடிகைகள் என்ன பொம்மைகளா?

கோபத்தில் பொங்கிய நித்யா மேனன்

நடிகை நித்யா மேனன் தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்து, தனக்கான தனி இடத்தைப் பிடித்துள்ளார்.

தமிழில் அவர் நடிப்பில் வெளியான ‘காஞ்சனா – 2’, ‘ஒகே கண்மணி’, ‘மெர்சல்’, ‘திருச்சிற்றம்பலம்’ ஆகியவை அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன. ‘குமாரி ஸ்ரீமதி’, ‘மாஸ்டர்பீஸ்’ ஆகிய இணையத் தொடர்களும் நல்ல வரவேற்பினைப் பெற்றன.

தற்போது, நடிகர் விஜய் சேதுபதியுடன் ஒரு படத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய நித்யா மேனன், “பெரும்பாலான ஆண்கள், சாதாரண பெண்களிடம் நடந்துகொள்வதைப்போல் நடிகைகளிடம் நடப்பதில்லை.

நடிகைகள் பொதுவெளிக்கு வந்தால் அவர்களைத் தொடுவதும், செல்ஃபி எடுக்கக் கட்டாயப்படுத்தும் என சுலபமாக மேலே கையை வைக்க முடிகிறது.

இதே வேலையை சாதாரண பெண்ணிடம் செய்வார்களா? நடிகைகள் என்ன பொம்மைகளா?” எனக் கண்டித்துள்ளார்.