Take a fresh look at your lifestyle.

வைரலாகும் விஜய் எடுத்து, ஆர்த்தி பகிர்ந்த புகைப்படம்!

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, தளபதி விஜய் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் தளபதி விஜய் இவ்வளவு அழகாக புகைப்படம் எடுப்பாரா என்று ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே ஆர்த்தி ஜெயம் ரவி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் மற்றும் குழந்தைகளின் புகைப்படத்தை பதிவு செய்து வருவார்.

அந்த வகையில் அவர் ரசிகர்களில் பல கேள்விகளுக்கு பதில் அளித்த நிலையில், ‘நீங்கள் இதுவரை வெளியிடாத புகைப்படம் ஒன்றை வெளியிடுங்கள்’ என்று ஒரு ரசிகர் கேட்டிருந்தார். அதற்கு ஜெயம் ரவியுடன் ரொமான்ஸாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஆர்த்தி ரவி, இந்த புகைப்படத்தை எடுத்தது தளபதி விஜய் என்று கூறியுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவர் இந்த பதிவில் ஜெயம் ரவியுடன் இணைந்து எடுத்த தனக்கு பிடித்த புகைப்படம், ஜெயம் ரவிக்கு பிடித்த திரைப்படம் மற்றும் தன்னுடைய கல்வி தகுதி உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

– தேஜேஷ்