இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா, லாவண்யா திருப்பதி, அழகம் பெருமாள், லட்சுமி பிரியா, அஸ்வின், போஸ் வெங்கட், சாரா, பரணி ஆகியோர் நடித்துள்ள படம் தணல்.
ஜான் பீட்டர் மற்றும் மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய, கலைவாணன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். தணல் படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
‘தணல்’ படத்தின் ஆழமான உணர்வுகள், நடிகர்களின் திறமையான நடிப்பு மற்றும் வலுவான கதைசொல்லல் ஆகியவற்றிற்காகத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இருந்து நேர்மறையான பாராட்டுகள் கிடைத்து வருகிறது.
இந்தப் பாராட்டுகள் மூலம் திரையரங்குகளில் ‘தணல்’ படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் திரையரங்குகளில் அதிகரித்துள்ளது.
‘தணல்’ குறித்து முன்னணி எக்ஸ்பிட்டர் பகிர்ந்து கொண்ட தகவல்; “தணல் படம் திரையிடப்பட்ட நாள் முதலே பார்வையாளர்கள் எண்ணிக்கை திரையரங்குகளில் அதிகமாகத் தொடங்கியது.
விறுவிறுப்பாகவும் அதேசமயம் மனதைத் தொடும் கதையாகவும் இருப்பதாக படம் பார்த்த பார்வையாளர்கள் சொல்கின்றனர். கூட்டம் அதிகரித்து வருவதால் அதற்கேற்றாற் போல கூடுதல் காட்சிகள் திரையிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் படத்தின் தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தயாரிப்பு அணியில் இருந்து பேசிய செய்தித் தொடர்பாளர்: “ இந்தப் படத்திற்கு நிறைய அன்பு கிடைத்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது.
படத்தின் வெளியீடு தாமதமாகி இருந்தாலும் இப்போது அதுவே அதிர்ஷ்டமாகி உள்ளது. படத்திற்கு கிடைத்து வரும் பாசிட்டிவ் விமர்சனங்கள் மற்றும் அரங்கம் நிறந்த காட்சி மனநிறைவாக உள்ளது” என்றார்.
‘தணல்’ தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.