Take a fresh look at your lifestyle.

வைரலாகும் சிம்வுவின் தக் லைஃப் போஸ்டர்!

கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் இணைந்து உருவாக்கும் கேங்ஸ்டர் படம் தான் ‘தக் லைஃப்.’ ஜனவரி முதல் சென்னை, செர்பியா, ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் சிம்பு இணைந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில், ‘தக் லைஃப்’ படத்தில் சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ப்ரோமோ வீடியோ மூலம் ரசிகர்களுக்கு விருந்தளிக்கப்பட்டது.

பாலைவனத்தில் கார் துரத்தலில் சிம்பு தனது எதிரிகளை நோக்கி தோட்டாக்களை வீசுவதை 40 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ காட்டுகிறது.

ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை முழு வீடியோவையும் ஒளிரச் செய்கிறது. சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘தக் லைஃப்’. இப்படத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கவுதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், அபிராமி, நாசர், அலி ஃபசல், பங்கஜ் திரிபாதி, சன்யா மல்ஹோத்ரா, வையாபுரி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு ரவி கே.சந்திரன், படத்தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத்.

– தேஜேஷ்