உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சோனி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் எஸ்கே 21 படத்தின் டைட்டில் மற்றும் டீசர் நேற்று மாலை வெளியானது.
இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்தப் படத்தின் 80% காட்சிகள் காஷ்மீரிலும் மீதி சென்னையிலும் தொடர்ந்து நடைபெற்றது. இன்னும் ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு இருக்கின்றது.
இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு எஸ்கே 21 படத்தின் பெயர் மற்றும் டீசரை உலக நாயகன் கமல்ஹாசன் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்து படத்தின் பெயர் மற்றும் டீசரை நேற்று மாலை 5 மணியளவில் தனது X தளத்தில் வெளியிட்டார்.
படத்தின் பெயர் அமரன் என்று வைக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிப்பது போன்ற காட்சிகள் இருக்கின்றது. இதுவரை சிவகார்த்திகேயன் ரஜினி பார்முலா படங்களில் தான் பெரும்பாலும் நடித்துள்ளார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், அயலான் இப்போது கார்த்திக்கின் தாக்கத்தை ஏற்படுத்திய அமரன் பெயருடன் உலக நாயகன் கமல்ஹாசன் நிறுவனத்தில் வித்தியாசமான கதைகளத்தில் வருவது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல திரைத்துறையினர் மத்தியிலும் மிகப்பெரிய ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
– தேஜேஷ்