Take a fresh look at your lifestyle.

மீண்டும் மணிரத்னத்துடன் இணையும் சிம்பு!

‘உலக நாயகன்’ கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி உருவாக்கிய ‘தக்லைஃப்’ திரைப்படம் ஜூன் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. கமலுடன் சிம்பு, அபிராமி, திரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘தக் லைஃப்’ படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் ஊர் ஊராகச் சென்று படம் குறித்து புதிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.

‘தக் லைஃப்’ படத்தைத் தொடர்ந்து புதுமுகங்களை வைத்து காதல் கதையொன்றை மணிரத்னம் இயக்கவிருப்பதாக தகவல் பரவியது.

இதனை மணிரத்னம் திட்டவட்டமாக மறுத்திருந்தார். இந்த நிலையில் மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படம் குறித்து நம்பகமான செய்தி வெளிவந்துள்ளது.

அந்தப் படத்தில் சிம்பு ஹீரோவாக நடிப்பது உறுதியாகி இருக்கிறது. முழுக்க முழுக்க காதலை மையமாகக்  கொண்டு இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

நாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. மணிரத்னத்துடன், சிம்பு மூன்றாம் முறையாக இணைகிறார்.

‘தக் லைஃப்’ படத்துக்கு முன்பாக மணியின் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் சிம்பு  நடித்திருந்தார். படத்தின் பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும்.

இசை வழக்கம் போல் ஏ.ஆர். ரஹ்மான் என்பதில் சந்தேகம் இல்லை.

– பாப்பாங்குளம் பாரதி.