ஷாருக்கானின் டன்கி படத்துக்கு போட்டியாக ரிலீஸ் செய்யப்பட்ட பிரபாஸ் நடித்த சலார் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், மலையாள நடிகர் பிரித்விராஜ், ஸ்ருதி ஹாசன் நடித்த சலார் திரைப்படம் ஷாருக்கானின் டன்கி படம் ரீலீசான தேதியிலேயே நாடு முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் படத்துக்கு போட்டியாக வெளியான சலார் படம் 3வது நாளிலேயே 200 கோடி ரூபாய் வசுலைக் குவித்து சாதனை படைத்துள்ளது.
முதல் இரண்டு நாளில் 147 கோடி ரூபாயை அள்ளிய சலார் திரைப்படம் மூன்றாவது நாளில் 61 கோடி ரூபாயை குவித்து ஒட்டுமொத்தமாக 200 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது.
– தேஜேஷ்