ஷங்கர் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவான ‘இந்தியன்’ திரைப்படம் 1996-ம் ஆண்டு வெளிவந்தது. நல்ல பெயர் வாங்கியது. வசூலையும் குவித்தது.
இதன் இரண்டாம் பாகம் ‘இந்தியன்-2′ எனும் பெயரில் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியானது.
கமலுடன் இணைந்து சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, விவேக், நெடுமுடி வேணு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
ஐந்தாறு ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த ‘இந்தியன் 2′ திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.
இந்தப் படத்தின் பட்ஜெட் என்ன? வசூல் என்ன? என்பவை போன்ற விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் ‘இந்தியன்-2′ படத்தில் நடித்த எஸ்.ஜே. சூர்யா, படம் தொடர்பாக சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
படத்தில் எஸ்.ஜே.சூர்யா வசிக்கும் அரண்மனை போன்ற பங்களா, 8 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டதாம்.
இதேபோல் சண்டை மற்றும் பாடல் காட்சிகளுக்காக 20 அரங்கங்கள் அந்தப் படத்துக்காக பிரமாண்டமாக அமைக்கப்பட்டன. ஒவ்வொரு அரங்கத்துக்கும், எஸ்.ஜே. சூர்யாயின் இல்லத்தை அமைப்பதற்கான அதே செலவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்.ஜே. சூர்யாவின் கூற்றுப்படி பார்த்தால், ‘இந்தியன்-2′ படத்துக்காக, அரங்கங்களை உருவாக்க மட்டும் 160 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
நட்சத்திரங்கள், இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்கள் சம்பளம் எல்லாம் சேர்த்தால்?
மயங்கி விழ வைக்கிறது ‘இந்தியன் -2′ பட்ஜெட்.
– பாப்பாங்குளம் பாரதி.