Take a fresh look at your lifestyle.

ரீ – ரிலீஸ் ஆகிறது ‘கரகாட்டக்காரன்’!

1989 ஆம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான படம் கரகாட்டக்காரன். இளையராஜா இசையில் உருவான அனைத்துப் பாடல்களும் தேன் சொட்டுகள்.

ராமராஜன் கதாநாயகனாக நடித்த இந்தப் படத்தில்தான் தேவிகாவின் மகள் கனகா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, காந்திமதி, சண்முக சுந்தரம், சந்தானபாரதி, சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில், கவுண்டமணி – செந்தில் நடித்த காமெடி காட்சிகள் இன்றும் பேசப்பட்டு வருகிறது. வாழைப்பழ காமெடி, கரகாட்டக்காரன் படத்தின் ‘ஹை லைட்’ அம்சம். இன்றைக்கும் ஏதாவது ஒரு சேனலில் இந்தக் காமெடி காட்சி  ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

இந்தப் படம்  உருவான நேரத்தில் கவுண்டமணி கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் எஸ்.எஸ்.சந்திரன்.

அவருக்கு அட்வான்ஸ் கூட கொடுத்து விட்டார்கள். ஆனால், ராமராஜன் கவுண்டமணியை இந்தப் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் விரும்பினார். இயக்குநர் கங்கை அமரன் ஏற்றுக்கொண்டார்.

இந்தப் படம் வெளியாகி 35 வருடங்கள் கடந்துள்ள நிலையில், கரகாட்டக்காரன் திரைப்படம்  ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இளையராஜாவின் பிறந்த நாளில் அவரை சந்தித்து ஆசி பெற்ற ராமராஜன்,  “வரும் 16 ஆம் தேதி கரகாட்டக்காரன் படத்திற்கு 36 வயது ஆகிறது. இந்தப் படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் பணிகளைத் தொடங்கியுள்ளோம். விரைவில் இது குறித்து செய்திகள் வெளியாகும்” என்று தெரிவித்தார்.

ரீ – ரீலிசிலும் வசூல் அள்ளும் என நம்புகிறார் ‘கிராம’ ராஜன்.

– பாப்பாங்குளம் பாரதி.