Take a fresh look at your lifestyle.

29 வயதைத் தொடும் ராஷ்மிகா மந்தனா!

தென்னிந்திய மொழிகளில் கலக்கி விட்டு, இந்திக்கும் சென்று வெற்றிக்கொடி நாட்டியவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடித்து கடந்த ஆண்டு வெளியான தெலுங்குப் படமான ‘புஷ்பா -2’ இந்திய சினிமா வரலாற்றில் வசூல் சாதனை செய்துள்ளது.

எனினும் ராஷ்மிகா மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த இந்திப் படமான ‘சிக்கந்தர்’ ரசிகர்கள் ஆதரவைப் பெறவில்லை. நம்ம ஊர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய இந்தப் படம் கடந்த 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டது.

இதனைப் பொருட்படுத்தாமல் தனது பிறந்தநாளைக் கொண்டாடும் உற்சாகத்தில் திளைத்துள்ளார் ராஷ்மிகா.

நடிகைகள் பெரும்பாலும் தங்கள் வயதைச் சொல்வதில்லை. ஆனால் ராஷ்மிகா மந்தனாவுக்கு, தனது வயதைச் சொல்வதில் தயக்கம் கிடையாது.

இப்போது 28 வயதில் நடைபோடும் மந்தனா, இன்னும் இரண்டு நாட்களில் 29-வது வயதில் அடி எடுத்து வைக்கிறார். ஏப்ரல் 5 ஆம் தேதி அவரது பிறந்தநாள்.

இதனை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  “இது எனது பிறந்தநாள் மாதம். இதனால் உற்சாகமாக இருக்கிறேன். வயது உயரும்போது, பிறந்தநாள் கொண்டாடும் ஆர்வம் குறையும் என்பார்கள். ஆனால் எனக்கு ஆர்வம் குறையவில்லை. 29 வயது ஆகிறது என்பதை நம்பவே முடியலை” எனப் பதிவிட்டுள்ளார்.

– பாப்பாங்குளம் பாரதி.