Take a fresh look at your lifestyle.

டி.பி. கஜேந்திரனின் ‘கலைக்குடும்பம்’!

பேசும் படம்:

கலைமாமணி விருது பெற்ற பழம்பெரும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகை டி.பி.முத்துலட்சுமி அவர்களின் திருமண புகைப்படம் இது.

முத்துலட்சுமியின் கணவர் பி. கே. முத்துராமலிங்கம் அப்போதைய தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் நிறுவனத் தலைவராக இருந்தவர்.

சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்த டி.பி.முத்துலட்சுமி, டி.ஏ.மதுரம், சி.டி.ராஜகாந்தம் ஆகியோரை அடுத்து, நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.

டி.பி.முத்துலட்சுமி – பி.கே. முத்துராமலிங்கம் இவர்களது வளர்ப்பு மகன்தான் நடிகரும் இயக்குனருமான டி. பி. கஜேந்திரன்.

குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் இயக்குநர் டி. பி. கஜேந்திரன். கே. பாலசந்தர், விசு ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
 
சிதம்பர ரகசியம் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர். 1988-ல், வீடு, மனைவி, மக்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்
 
பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவம், சீனா தானா, எங்க ஊரு காவல்காரன், பாட்டு வாத்தியார், பாசமுள்ள பாண்டியரே ஆகிய படங்களை இயக்கியவர்.