பேசும் படம்:
குழந்தையின் பசியறிந்து பாலூட்டும் அன்னையின் அன்புக்கு இணையானது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மக்கள் மீது வைத்திருந்த பாசம்.
இளம் வயதில் பசியின் கொடுமையை உணர்ந்த எம்.ஜி.ஆர், அந்தக் கொடுமையை மற்ற யாரும் அனுபவிக்கக் கூடாது என்று நினைத்தார்.
அதன் வெளிப்பாடே பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டமாக விரிவாகக் கொண்டு வரப்பட்டது.
*நிகழ்ச்சி ஒன்றில் தாயுள்ளத்தோடு குழந்தைக்கு சோறூட்டும் எம்.ஜி.ஆர்.