Take a fresh look at your lifestyle.

‘வேட்டையன்’ படத்திலிருந்து விடைபெற்ற ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் `வேட்டையன்’.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் பல பகுதிகளில், கேரளா உள்பட இந்தியாவின் சில பகுதிகளில் படமாக்கப்பட்ட நிலையில் ரஜினியின் காட்சிகள் முடிந்து விட்ட நிலையில் வேறு சில நடிகர்களின் காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டிய நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே தனது காட்சியின் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து இயக்குனர் ஞானவேல் உள்பட படக்குழுவினர் அனைவரிடமும் ரஜினிகாந்த் விடைபெற்ற காட்சியும், ரஜினிக்கு பூங்கொத்து கொடுத்து படக்குழுவினர் வழியனுப்பி வைத்தக் காட்சியின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

`வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் சில நாட்கள் ஓய்வு எடுக்கும் ரஜினிகாந்த், அதன் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் `கூலி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் `கூலி’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா டகுபாய், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகினி, ரமேஷ் திலக், ரக்சன், ஜிஎம் சுந்தர் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் `வேட்டையன்’ படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. அனிருத் இசையில் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

– தேஜேஷ்