நடிகர் விஜய் முத்து, முண்டாசுப்பட்டி, விக்ரம் வேதா, துணிவு, மகான் என கவனிக்கத்தக்க திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து முத்திரைப் பதித்து வருகிறார்.
சமீபத்திய ஹிட் ஆன மலையாளத் திரைப்படமான மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் இன்ஸ்பெக்டராக கவனம் ஈர்த்தார்.
இந்த நிலையில், மஞ்சுமல் பாய்ஸ் படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விஜய்முத்துவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்த பாராட்டு விஜய் முத்துவுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.