Take a fresh look at your lifestyle.

வெளியானது அல்லு அர்ஜுனின் புஷ்பா-2 டீசர்!

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. இந்தப் படம் உலகம் முழுவதும் 350 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று இந்தப் படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஒரு நிமிடம் மட்டுமே உள்ள இந்த டீசரில் சேலை மற்றும் ஜாக்கெட் அணிந்த அல்லு அர்ஜுன் ஸ்டைலாக நடந்து வருவது மற்றும் அதிரடி ஆக்சன் காட்சிகளில் ஈடுபடுவதுமான காட்சிகள் உள்ளது.

‘புஷ்பா தி ரூல்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படமும் முதல் பாகம் போலவே அதிரடி ஆக்சன் மற்றும் திரில்லிங் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், சுனில் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை சுகுமார் இயக்கி வருகிறார்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகிய இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

– தேஜேஷ்