Take a fresh look at your lifestyle.

வரவேற்பைப் பெற்ற ‘பிரம்மயுகம்’ பர்ஸ்ட்லுக்!

புத்தாண்டையொட்டி ‘பிரம்மயுகம்’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மலையாள நடிகர் மம்முட்டி நடித்துள்ள ‘பிரம்மயுகம்’ படமும் மலையாள மொழியில் மட்டுமின்றி தமிழிலும் வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்பப் பணிகள் நடக்கின்றன.

இந்தப் படத்தை ராகுல் சதாசிவன் இயக்கியுள்ளார். இதில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டாலிஸ் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தில் வரும் மம்முட்டியின் தோற்றம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

– தேஜேஷ்