Take a fresh look at your lifestyle.

பன்னாட்டு மொழிகளில் ரீமேக்காகும் பார்க்கிங்!

நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், இந்துஜா ரவிச்சந்திரன், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பார்க்கிங்’. இதை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி இருந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. திரையரங்குகளில் மட்டுமின்றி, ஓடிடியிலும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இந்தப் படம் 4 இந்திய மொழிகளிலும் ஒரு வெளிநாட்டு மொழியிலும் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தாகி இருக்கிறது.