புதிய சமுதாய மாற்றத்திற்கான வழிகாட்டியாக இப்படம் அமையும் எனக் கூறும் இயக்குநர் விஜய் கார்த்திக், பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பதே சமூகநீதி என்ற கருத்தை ஆழமாகச் சொல்லும் என்கிறார்.
இசை நிகழ்ச்சிக்காக ரஹ்மானுக்கு ரூ.29.50 லட்சம் முன்பணம் வழங்கினோம். ஆனால் மாநாடு நடத்த சரியான இடமும், அரசு அனுமதியும் கிடைக்கவில்லை. இசை நிகழ்ச்சியும் நடக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமா பக்கம் தலை காட்டியுள்ள சவுந்தர்யா அமேசான் பிரைம் ஓடிடி தளத்துடன் இணைந்து 'கேங்க்ஸ்' என்ற புதிய வெப் தொடரைத் தயாரிக்கிறார்.
சோவும், நாகேஷூம் சேர்ந்து நடித்த பல படங்களில் காமெடி சென்ஸ் குறிப்பிடும்படி இருக்கும் என்றாலும், இந்தப் படத்தை இப்போது பார்த்தாலும் ரசிக்கும்படி இருப்பது சிறப்பு.