வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வருகிறது ‘ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் மெட்ராஸ்’ (once upon a time in madras). ஃப்ரைடே ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
பிரசாத் முருகன் இயக்கியுள்ள படத்திற்கு காளிதாஸ் மற்றும் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ஜோஸ் பிராங்கிளின் இசையமைத்துள்ளார்.
ஹைபர் லூப் பின்னணியில் திர்ல்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தில் பரத், ஷான், ராஜாஜி, விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் கனிகா, தலை வாசல் விஜய், அருள் டி சங்கர், பொற்கொடி, பிஜிஎஸ் கல்கி, சையத் உள்ளிட்டோரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சென்னையை மையமாக வைத்து இப்படத்தின் நகர்வு இருப்பதால் ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் மெட்ராஸ் படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றுள்ளது.
இந்தப் படத்தைப் பற்றி பேசியுள்ள இயக்குநர் பிரசாத் முருகன், மனித வாழ்வில் சந்தர்ப்பம் தான் ஹீரோ. சந்தர்ப்பம் தான் வில்லன்.
ஒரு பொருள் ஒரு மனிதன் கையில் எந்த சந்தர்ப்பத்தில் கிடைக்கிறது என்பதைப் பொறுத்து தான் அவன் அப்பொருளை நன்மைக்கோ அல்லது தீமைக்கோ பயன்படுத்துவான்.
அப்படி நான்கு பேர் கைகளில் எதிர்பாராத விதமாக ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. வெவ்வேறு வாழ்வியலில் இருக்கும், அவர்களது வாழ்க்கையை, அந்தத் துப்பாக்கி எப்படி மாற்றுகிறது என்பதைக் கருத்தியல் அரசியலுடன் கமர்ஷியல் கலந்து பேசியுள்ளோம்” என்கிறார்.
படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.


