விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லரில் வெப்சீரிஸ் மார்ச் 28, 2025 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள சுவாரஸ்யமான டிரெய்லர் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டின் பிரம்மாண்டமான தசரா திருவிழாவின் பின்னணியில் பழிவாங்கும் கதையாக இது அமைந்திருக்கிறது.

ஆக்ஷன், எமோஷன், உண்மை, அதிகாரம் மற்றும் பழிவாங்கல் என ’OKJK’ வெப்சீரிஸின் உலகம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவின் இதுவரை பார்த்திராத கண்கவர் காட்சிகளுடனும் கொண்டாட்டத்துடனும் அதற்கு பின்னான உணர்வுகளுடனும் ‘ஓம் காளி ஜெய் காளி’ உருவாகியுள்ளது.
வெப்சீரிஸில் கணேசன் கதாபாத்திரத்தைப் பற்றிப் பேசிய நடிகர் விமல், “நான் இதற்கு முன்பு நடித்திருந்த மற்ற கதாபாத்திரங்களில் இருந்து கணேசன் வித்தியாசமான கதாபாத்திரமாக இருந்தது.
சாதாரண ஒரு நபரில் இருந்து திருவிழாவிற்காக புதிய அவதாரம் எடுத்தது மறக்க முடியாத சவாலான அனுபவமாக இருந்தது”.
வெப்சீரிஸ் பற்றிப் பேசிய இயக்குநர் ராமு செல்லப்பா, “தசரா என்பது வெறும் திருவிழா மட்டுமல்ல. அது ஒரு உணர்வு. நாட்டுப்புறக் கதைகளையும் பழிவாங்குதலையும் ஒன்றிணைக்கும் கதையை இதில் உருவாக்கி இருக்கிறோம்” என்றார்.