Take a fresh look at your lifestyle.

விஜய் சேதுபதி யூடியூப் சேனலில் வெளியான ‘மெளன வதம்’!

எழுத்தாளர் மற்றும் நடிகர் வேல ராமமூர்த்தி முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்த ‘மெளன வதம்’ குறும்படம் சென்னை இண்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவல், இந்தியன் பனோரமா இண்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவல் மற்றும் 18 ஆம் மும்பை இண்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவல் போன்ற பல பிலிம் ஃபெஸ்டிவலில் விருதுகள் பெற்றுள்ளன.

இந்தக் குறும்படம் நடிகர் விஜய் சேதுபதியின் யூடியூப் சேனலில் நேற்று வெளியானது. இப்படத்தை அமிர்த்தராஜா இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் பாலாஜி தரணிதரனின் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘ஒரு பக்க கதை’ போன்ற படங்களில் உதவி இயக்கநராகப் பணி புரிந்தவர்.

சீதக்காதி படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சரஸ்காந்த் கண்ணையன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘முகிழ்’ மற்றும் ‘அயலி’ பட இசையமைப்பாளர் ரேவா இசை அமைத்துள்ளார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், 96, சீதக்காதி மற்றும் மெய்யழகன் போன்ற படங்களுக்குப் படத்தொகுப்பு மேற்கொண்ட ஆர். கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். ‘பாக்கெட் மணி பிலிம்ஸ்’ இப்படத்தை தயாரித்துள்ளது.