Take a fresh look at your lifestyle.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்?

நடிப்பு – இயக்கம் – தயாரிப்பு ஆகிய தளங்களில் இயங்கி வருபவர் தனுஷ். அவர் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

பொங்கலையொட்டி இந்தப் படம் வெளியாகவுள்ளது. சுதந்திரப் போராட்ட காலக்கட்டத்தை மையமாக வைத்து இதன் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.

கேப்டன் மில்லரை முடித்த கையோடு, தனுஷ், தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் புதிய படம் ஒன்றை முடித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு வெளியான ‘ப.பாண்டி’ திரைப்படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த தனுஷ், டைரக்ட் செய்துள்ள இரண்டாவது படம் இது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. தற்காலிகமாக ‘டி 50’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.

ஏஆர் ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். இதனை தொடர்ந்து தனது ‘வுண்டர் பார்’ நிறுவனம் மூலம் மீண்டும் இயக்குநர் அவதாரம் தரித்துள்ளார், தனுஷ்.

தன்னுடைய அக்கா மகன் பவிஷை இந்த படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் செய்கிறார், தனுஷ்.

பவிஷுக்கு ஜோடி அனிகா சுரேந்திரன். சரத்குமாரும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

பிரியா பிரகாஷ் வாரியார், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ், மேனன் ஆகியோரும் உள்ளனர். தனுஷும் கவுரவ வேடத்தில் தோன்றுகிறார். ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.

பழைய பாடல் வரிகளைப் படங்களுக்கு தலைப்பாக வைப்பது ஒரு பேஷன்.

அந்த வரிசையில் இந்தப் படத்துக்கு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பாடல் ‘போலீஸ்காரன் மகள்’ என்ற படத்தில் இடம் பெற்றது. பிபி சீனிவாஸ் பாடி இருந்தார்.

தலைப்பே, இது காதல்படம் என சொல்லாமல் சொல்கிறது அல்லவா!

-பாப்பாங்குளம் பாரதி.