மல்லிதி வசிஷ்டா இயக்கத்தில், மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வம்பரா’ படத்தில் நடிகை த்ரிஷா இணைந்துள்ளார்.
இந்தப் படத்திற்கு, ஆஸ்கர் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். மெகா கூட்டணியில் உருவாகி வரும் ‘விஸ்வம்பரா’ படம் அடுத்த ஆண்டு ஜனவரி 10 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகர் சிரஞ்சீவி, இசையமைப்பாளர் கீரவாணியுடன் இருக்கும் தனது புகைப்படைத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை த்ரிஷா.