Take a fresh look at your lifestyle.

நட்புக்கான அர்த்தமாக வாழ்ந்த எம்.ஜி.ஆரும் நம்பியாரும்!

மக்கள் திலகத்துடன் ஆரம்பக் காலத்தில் இருந்து இணைந்து நடித்தவர் எம்.என். நம்பியார்.

எம்.ஜி.ஆரை எப்போதும் பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவுக்கு நெருக்கம் இருந்தது நம்பியாருக்கு.

எம்.ஜி.ஆர் உடல்நலம் சரியில்லாத நிலையிலும் திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்டபோது, சிவாஜியுடன் போட்டி போட்டு எம்.ஜி.ஆரைத் தனது கன்னத்தில் முத்தமிட வைத்தவர்.

கைவிரல்களை நெறித்தபடி ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் இவர் பேசும் “மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?”  என்ற வசனம் அந்தக் காலத்திய பஞ்ச் டயலாக் மிகவும் நெருக்கமாக இருந்த அவர்களுடைய நட்புக்கு ஓர் அடையாளம்.

நம்பியாரின் கல்யாணத்தின் போது அவருக்கு மாப்பிள்னைத் தோழனாக இருந்தவர் எம்.ஜி.ஆர் தான்!