சுந்தர் சி இயக்கத்தில் உருவான `அரண்மனை-4’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதனிடையே கிளைமாக்ஸ் காட்சியில் குஷ்பு மற்றும் சிம்ரன் நடனமாடும் பாடல் குறித்த விமர்சனங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில், குஷ்பு அக்காவுடன் இணைந்து ஆடியது தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும், சுந்தர் சி படத்தில் மீண்டும் நடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நேற்று சிம்ரன் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இதனிடையே தற்போது குஷ்பு இதுகுறித்த வீடியோவை வெளியிட்டு நானும், சிம்ரனும் கஷ்டப்பட்டு வெயிலில் நடனம் ஆடி உள்ளோம்.
பிருந்தா மாஸ்டரும் கஷ்டப்பட்டு உள்ளார். ஆனால் சுந்தர் சி மட்டும் நிழலில் உட்கார்ந்து மானிட்டரில் பார்த்துக் கொண்டே குஷ்புவிடம் நீ ஆடுவதை பார்க்கும்போது எனக்கு கஷ்டமாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து சுந்தர் சி சிம்ரனிடம் நீங்கள் ஆடிய ஆட்டம் சூப்பராக இருந்தது. குறிப்பாக கையில் வேல் வைத்துக்கொண்டு ஒரு பார்வை பார்த்தீர்களே, அது சூப்பராக இருந்தது’ என்று கூற இருவரும் மாறி மாறி புகழ்ந்து கொண்ட காட்சி அந்த வீடியோவில் உள்ளன.
இதுகுறித்து சிம்ரன், சுந்தர் சி இயக்கத்தில் மீண்டும் நடித்தது தனக்கு மகிழ்ச்சியாக இருந்ததாகவும், `ஐந்தாம் படை’ படத்திற்கு பிறகு நாங்கள் இருவரும் ஒரே படத்தில் இணைந்துள்ளோம். இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெற வேண்டும்’ என அவர் தெரிவித்தார்.
– தேஜேஷ்