Take a fresh look at your lifestyle.

‘கல்கி’யில் ரோபோவுக்கு குரல் கொடுத்த கீர்த்தி!

பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘கல்கி 2898ஏடி’ திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கமல்ஹாசன் வில்லனாக இந்தப் படத்தில் மிரட்டி இருப்பதாகவும் அவரது காட்சி 10 நிமிடங்கள் மட்டுமே என்றாலும் அசத்தலாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே இந்தப் படத்தின் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் பிரபாஸின் சிறந்த நண்பராக புஜ்ஜி என்ற ரோபோவை வரும் 22ஆம் தேதி அறிமுகப்படுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த புஜ்ஜி என்ற சிறிய வகை ரோபோவுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கமல்ஹாசன் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்காத நிலையில் அவர் நடிக்கும் திரைப்படத்தில் ஒரு கேரக்டருக்கு குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, ராஜேந்திர பிரசாத், பசுபதி, அன்னாபென் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இந்தப் படத்தை சுமார் 600 கோடி ரூபாய் செலவில் வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

– தேஜேஷ்