Take a fresh look at your lifestyle.

த்ரிஷாவை வித்தியாசமாக வாழ்த்திய கீர்த்தி!

நடிகை த்ரிஷா சமீபத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இதனிடையே த்ரிஷா விஜய்யுடன் நடித்த சமீபத்தில் வெளியான `கில்லி’ திரைப்படத்தை த்ரிஷாவின் பிறந்தநாளில் பார்த்து அவருக்கு வாழ்த்து சொல்ல கீர்த்தி சுரேஷ் திட்டமிட்டு இருந்தாராம்.

ஆனால் அன்றைய தினம் படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் நேற்று படத்தைப் பார்த்த கீர்த்தி சுரேஷ், படம் பார்த்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து த்ரிஷாவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

“நேற்று கில்லி படத்தை பார்த்து த்ரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

ஆனால், டிக்கெட் கிடைக்காததால் இன்று அவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என கீர்த்தி சுரேஷ் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

நடிகை த்ரிஷா பிறந்தநாள் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

– தேஜேஷ்